மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1308 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1308 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1308 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1308 days ago
கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி திடீரென விஸ்வரூபமெடுத்தது. பல புதிய படங்களை நேரடியாக வெளியிடவும், தியேட்டர்களில் வெளியான புதிய படங்களின் ஓடிடி உரிமையை வாங்கவும் சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள், பிரம்மாண்டமான படங்கள், பான் இந்தியா படங்கள் ஆகியவற்றிற்குத்தான் அதிக விலை கிடைக்கும். மற்ற படங்களை அந்த நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் உள்ளது.
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'ராதேஷ்யாம்' படத்தின் அனைத்து மொழி ஓடிடி உரிமைகளையும் அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு, ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொரிகளிலும் வெளியாகிறது. இத்தனை மொழி ஓடிடி உரிமைகளையும் சுமார் 250 கோடி கொடுத்து அமேசான் வாங்கியுள்ளதாம்.
சமீப காலங்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கிறதாம். படம் அடுத்த வாரம் தியேட்டர்களில் வெளியாகிறது. ஆனால், ஓடிடி வெளியீடு மே மாதத்தில் தான் இருக்கும் என்கிறார்கள்.
1308 days ago
1308 days ago
1308 days ago
1308 days ago