உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 20ல் விஜயின் பீஸ்ட் இசை வெளியீடு?

மார்ச் 20ல் விஜயின் பீஸ்ட் இசை வெளியீடு?

நெல்சன் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து அனிருத் இசையமைப்பில் வெளியான அரபிக் குத்து பாடல் 125 மில்லியன்பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது .

வழக்கமாக விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெறும். மெர்சல், சர்க்கார், மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மார்ச் 20ம் தேதி பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !