அதர்வா - கவுதம் மேனன் நடிக்கும் புதிய வெப் தொடர்
ADDED : 1320 days ago
தமிழ் சினிமாவில் தற்போது நிறைய வெப் தொடர்கள் உருவாகி ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி வரும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு, முதலும் நீ முடியும் நீ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அதர்வா மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து ஒரு புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை பிரசாத் முருகேசன் இயக்குகிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப் தொடர் நேரடியாக வெளியாக இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது .