சுந்தர் சி படத்தில் நடனமாடிய யுவன்
ADDED : 1308 days ago
இயக்குனர் சுந்தர்.சி தற்போது கலகலப்பு பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது.
இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா நடனமும் ஆடியுள்ளார். இதனை திவ்யதர்ஷினி பகிர்ந்துள்ளார். யுவனுடன் நடனம் ஆடியப்பின் அனைவரும் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.