ஐஸ்வர்யா தனுஷின் வாழ்த்தும், செல்வராகவன் நன்றியும்
தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நேற்று தன்னுடைய 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அவருக்கு ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்தில், “என்னுடைய குரு, நண்பன், அப்பா…..என்று நான் செல்ல முடியும்..” என செல்வராகவனை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
அவருடைய வாழ்த்திற்கு “நன்றி எனது அன்பு மகளே,” என்று நன்றி தெரிவித்துள்ளார் செல்ராகவன். கணவன், மனைவியாக இருந்த தனுஷ், ஐஸ்வர்யா சில வாரங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இன்னமும் ஐஸ்வர்யா தனுஷ் என்றுதான் தன்னுடைய பெயரை வைத்துள்ளார் ஐஸ்வர்யா. தனுஷின் அண்ணனான செல்வராகவனுக்கு நேற்று அவர் பிறந்தநாள் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.