மீண்டும் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1334 days ago
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டு உள்ளது. லாக்கப் என்ற படத்தை இயக்கிய எஸ். ஜி .சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா, கருணாகரன், சுனில் ரெட்டி, கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள்.