அண்ணன் செல்வராகவனை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய தனுஷ்!
ADDED : 1547 days ago
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டிருந்தார் செல்வராகவன்.
மேலும், நேற்றைய தினம் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் தன்னை பாசத்துடன் கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது போல் தெரிகிறது.