சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்!
ADDED : 1366 days ago
தற்போதைய பிரபல நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சமந்தா, சாதி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது தோழி ஷில்பா ரெட்டி என்பவருன் இணைந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலமும் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்களையும் இதில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா.