'பிச்சைக்காரன் 2' படம் பற்றிய தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி
ADDED : 1356 days ago
2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் நடித்திருந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய் ஆண்டனியே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாக யார் பிகிலி , யார் ஆன்டி பிகிலி என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் படக்குழுவினரால் ப்ரோமோஷன் செய்யப்பட்டது .
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் தான் ஆன்டி பிகிலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி .மேலும் அக்கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். யார் பிகிலி என்ற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் .