சமந்தா - வருண் தவான் இணைந்து நடிக்கும் ' சிட்டாடல் ' புதிய வெப் தொடர் !
ADDED : 1350 days ago
பாலிவுட்டில் ராஜ் மற்றும் டீகே ஆகியோரது இயக்கத்தில் வெளியான 'தி பேமிலி மேன்' வெப் தொடரின் இரண்டாம் பக்கத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமந்தா மீண்டும் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே ஆகியோருடன் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார் . சிட்டாடல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்த வெப் தொடரில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இந்த வெப் தொடரை தயாரிக்கின்றனர். தற்போது சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.