மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1298 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1298 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1298 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது விக்ரம். கமல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்சேதுபதி வில்லனாகவும் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல ரஜினியின் இரண்டு படங்களுக்கு இசையமைத்து விட்ட அனிருத் முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் கமலுடன் இணைந்து உள்ளார்.
இந்தப்படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றும் அதற்கு பதிலாக பின்னணி இசையின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவுக்கும் எஸ்ஜே சூர்யாவுக்கும் என தனித்தனியாக தீம் மியூசிக் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்தவகையில் இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் மூவருக்குமே தனித்தனி தீம் மியூசிக்குகளை அனிருத் உருவாக்கி வருகிறாராம். மாநாடு படம் போல இந்தப்படத்திலும் தீம் மியூசிக் பேசப்படும் என்கிறார்கள் அனிருத் வட்டாரத்தில்.
1298 days ago
1298 days ago
1298 days ago