மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1293 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1293 days ago
ஜிவி. பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் செல்பி. இந்த படத்தை மதிமாறன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, இது இயக்குனர் மதிமாறனுக்கு முதல் படம். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மேலும் சினிமாவில் தங்களின் முதல் படம் வெற்றி பெற்று விட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும். அடுத்த படத்தில் இந்த உலகத்தையே மாற்ற வேண்டுமென்று யோசிக்கத் தொடங்குவார்கள். அப்படித்தான் நானும் இருந்தேன் நினைத்தேன் என்று கூறிய இயக்குனர் மிஷ்கின், உதவி இயக்குனர்கள் காசிப் பேசுவதை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை மட்டுமே பேசவேண்டும். நெகட்டிவான விஷயங்களை பேசக்கூடாது. அப்படி நல்ல விஷயங்களை மட்டுமே பேசும்போது அது வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும். இப்படித்தான் இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்ப காலத்தில் சினிமாவை பத்தி நல்ல விஷயங்களாக யோசிப்பார் சிந்திப்பார். அதனால் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இந்த செல்பி படத்தை இயக்கியுள்ள மதிமாறனும் அதை கடைபிடிக்க வேண்டுமென்று கூறினார்.
1293 days ago
1293 days ago