சமந்தா படத்தில் இணைந்த ஹாலிவுட் பைட் மாஸ்டர்
ADDED : 1311 days ago
ஹாலிவுட்டில் டிரான்ஸ்போர்ட்டர்-3, இன்சப்ஷன் உள்பட பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் யான்னிக் பென். அதோடு ஹிந்தி, தெலுங்கில் சில படங்க ளுக்கும் இவர் ஸ்டன்ட் பயற்சிஅளித்துள்ளார். இந்த நிலை யில் தற்போது அவர் தெலுங்கில் சமந்தா நடித்து வரும் யசோதா படத்திலும் ஸ்டன்ட் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள் ளார். அதையடுத்து சமந்தா- யானிக் பென் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆக, யசோதா படத்தில் சமந்தா ஆக்சன் காட்சியில் நடிப்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. மே 1ம் தேதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.