வெப்சீரிஸில் மகத்
ADDED : 1343 days ago
நடிகர் மகத் ராகவேந்திரா, 'மங்காத்தா' திரைப்படம் மூலம் பிரபலமானவர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த மகத், 'காதல் கண்டிஷன் அப்லே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'ஈமோஜி' என்ற வெப் சீரியஸில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். மகத்துக்கு ஜோடியாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா ஆகிய இரு நடிகைகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், விஜே.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த வெப் சீரிஸ் ஆஹா ஓடிடித் தளத்தில் வெளியாகவுள்ளது.