13 ஆண்டு காத்திருப்பு - ‛அவதார் 2' டிரைலர் எப்போது ரிலீஸ்
ADDED : 1344 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி வசூல் சாதனை புரிந்த படம் ‛அவதார்'. இந்த மாதிரி ஒரு உலகம், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்களா என வியக்க வைத்தார் இயக்குனர். இதன் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகின்றன. கொரோனாவால் தள்ளிப்போன அவதார் 2, இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே இப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மே 6ல் மார்வல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்டர் ஸ்ட்ரேஞ் படத்தின் அடுத்த பாகம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் அவதார் 2 படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவதாரின் மற்றுமொரு பிரமாண்ட உலகத்தை காண ஆவல் கொண்ட ரசிகர்களின் 13 ஆண்டுகள் காத்திருப்பு முடிவு வர உள்ளது.