ஆர்.கே.சுரேஷின் விசித்திரன் மே 6ல் வெளியாகிறது
ADDED : 1293 days ago
கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஜோசப். இந்தப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா உள்பட பலர் நடிக்க பத்மகுமார் இயக்கியிருந்தார். தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்து விடுகிறார். அதையடுத்து அது விபத்து அல்ல, கொலை என்பதை கண்டுபிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் ஜேம்ஸ் படத்தில் நடித்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு கிரைம் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். அந்த படத்தை மலையாளத்தை இயக்கிய பத்மகுமாரே இப்போது விசித்திரன் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இப்படம் மே மாதம் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.