வாரணாசியில் ஆர்ஆர்ஆர் குழு வழிபாடு
ADDED : 1293 days ago
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் ஆர்ஆர்ஆர் படம் நாளை (மார்ச் 25) வெளிவருகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள இந்தப் படம் 500 கோடியில் தயாராகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கி உள்ள படம்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட படம் இப்போது வெளியாகிறது. இந்த படம் வெளியாவதால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
படத்தின் புரமோசனுக்காக எஸ்.எஸ்.ராஜமவுலி தலைமையிலான படக் குழுவினர் இந்தியா முழுக்க சுற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் வாரணாசிக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.