விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணையும் சமந்தா
ADDED : 1293 days ago
சமீபநாட்களாக சமந்தா நடித்து வரும் படங்களை பார்த்தால் பெரும்பாலும் கதையின் நாயகியை மையப்படுத்திய படங்களாகவே இருக்கின்றன. அந்த வகையில் அவர் தற்போது நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், யசோதா படத்தில் இன்னொரு மலையாள நடிகரான உன்னி முகுந்தனும் தான் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை டக் ஜெகதீஷ் பட டைரக்டர் சிவா நிர்வனா இயக்க உள்ளார் என்றும் தற்போது தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தில் இவர்கள் ஜோடியாக இணைந்து நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .