உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் - முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆர்ஆர்ஆர் - முதல் நாள் வசூல் எவ்வளவு?

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படம் பற்றி பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வெளிவந்துள்ளதால் இப்படமும் 'பாகுபலி 2' போலவே வசூலில் சாதனை படைக்கும் என பேச்சு பரவி வருகிறது.


நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 150 கோடியை எளிதில் கடந்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலுங்கு மாநிலங்களில் ஷேர் தொகையாக மட்டும் 74 கோடி கிடைத்துள்ளதாம். கர்நாடகாவில் 16 கோடி, தமிழகத்தில் 10 கோடி, கேரளாவில் 3 கோடி, அமெரிக்காவில் 'பெய்டு பிரிவியூ' காட்சிகளில் மட்டும் 26 கோடியும், இங்கிலாந்தில் 2 கோடியும், ஹிந்தியில் 20 கோடி வரையிலும் வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தத் தொகையே 148 கோடி வரை வருகிறது. இன்னும் விடுபட்ட வெளிநாடுகளின் விவரங்களையும் கணக்கிட்டால் 150 கோடிக்கும் மேல் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாளுக்கும் சேர்த்து கூட 150 கோடி வரலாம். முதல் வார முடிவில் 500 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வருகின்றன. 'பாகுபலி 2' வசூலை 'ஆர்ஆர்ஆர்' கடக்குமா, கடக்காதா என்பதுதான் ஒரு கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !