ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடிய யுவன்
ADDED : 1296 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் அனிருத்தின் இசையில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு திரைத்துறையைச் சார்ந்த நடிகர், நடிகைகள் பலரும் நடனமாடி அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் தற்போது ரசிகர் மத்தியில் பிரபலமாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக இன்னொரு இசையமைப்பாளரின் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா நடனமாடி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.