உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவிற்கு எப்போது முழுக்கு - டாப்சி சொன்ன பதில்

சினிமாவிற்கு எப்போது முழுக்கு - டாப்சி சொன்ன பதில்

தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வந்த டாப்சி இப்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛வாழ்நாள் முழுவதும் நடிக்க எனக்கு ஆசை கிடையாது. ஓரளவிற்கு தேவையான பணத்தை சம்பாதித்தும், ஓய்வெடுக்க முடிவெடுத்துவிட்டால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன். எனக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது. என் எண்ண ஓட்டம் நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையில் நின்றுவிட்டது. நான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தான் வாங்குவேன். இன்னும் சொல்லப்போனால் நிறைய பேரம் பேசி தான் பொருட்களை வாங்குவேன். அடிக்கடி விலையுர்ந்த செல்போன், கார் என மாற்ற பிடிக்காது'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !