ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்
விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படம் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து 'பராசக்தி' படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் விஜயின் 'ஜனநாயகன்' படத்தை விட சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்துக்கு கூடுதலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''தற்போதைய நிலவரப்படி ஜனநாயகன் படத்துக்கு 650 தியேட்டர்களும், பராசக்திக்கு 450 தியேட்டர்களும் ஒதுக்கி உள்ளோம். இதுதவிர பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்துக்கு 60 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட படங்கள் திரைக்கு வரும் போது சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், பராசக்தியை விட ஜனநாயகன் படத்துக்கு 200 தியேட்டர்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.