இறுதிக்கட்டத்தில் ராம் படம்
ADDED : 1288 days ago
பேரன்பு படத்திற்கு பிறகு ராம் இயக்கி வரும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தனுஷ்கோடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரயில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நிவின்பாலி, சூரி நடித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்க இருக்கிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.