'அட்டகத்தி' தினேஷ் - ஊர்வசியின் ‛ஜே பேபி'
ADDED : 1343 days ago
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‛ஜே பேபி'. இதில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஊர்வசி நடிக்கிறார். சுரேஷ் மாரி என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ரஞ்சித்திடம் பணியாற்றியவர். ரஞ்சித்தின் பெரும்பாலான படங்களில் தினேஷ் இடம் பெற்று விடுவார். அதேப்போன்று இந்த படத்திலும் நடிக்கிறார்.
இதுப்பற்றி ரஞ்சித் கூறுகையில், ‛‛வாழ்த்துகள் சுரேஷ்மாரி. நீங்கள் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் எதிர்பார்க்காத அன்பை, நாம் உருவாக்கியுள்ள ஜே பேபி படத்திலும் காண கிடைத்தது. உங்கள் திரையுலக வாழ்க்கை சிறக்கட்டும். இப்படம் உருவாக்க உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.