மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1258 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1258 days ago
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதிகளாக வீட்டினுள் நுழைந்தவர்கள் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா. ஆனால், அந்த சீசன் முடிவதற்குள் கணவனும் மனைவியும் மொத்தமாக பிரிந்தேவிட்டனர். அதன்பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் நித்யா - தாடி பாலஜி இருவருமே ஒருவரையொருவர் மாறி மாறி குறைசொல்வது, திட்டிக் கொள்வது என இப்போது வரை சர்ச்சை, சச்சரவுடன் தான் வலம் வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி கலந்து கொண்டிருந்த போது, 'என்னை பற்றியும் என் மகள் பற்றியும் அவதூறாக பேச வேண்டாம். அப்படி பேசினால் எங்களை பற்றி அசிங்கமான வார்த்தைகள் பேசிய உன் (பாலாஜி) ஆடியோவை வெளியிடுவேன்' என நித்யா கூறியிருந்தார். இது சில நாட்கள் இணையதளத்தில் வைரலானது. சமீபத்தில் அந்த வீடியோவை பார்த்த ஒரு நபர், 'பாலாஜி பாவம், உன் கூட வாழ்றதுக்கு சும்மா இருக்கலாம்' என கெட்ட வார்த்தையுடன் நித்யாவுக்கு மெசேஜ் செய்திருந்தார்.
அதற்கு பொறுமையாக பதிலளித்துள்ள நித்யா, 'உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. உன்னுடைய அம்மாவையோ, சகோதரியையோ, மகளையோ யாராவது இப்படி பேசினால் அவர்களை பொறுத்துக்கொள்வாயா?. மற்றவர்களை திட்டுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலையை பார்' என கூறியுள்ளார். தவறை உணர்ந்த அந்த நபர் மன்னிப்பு கேட்கவே, நித்யாவும் 'முன்பின் தெரியாதவர்களிடம் இனிமேல் இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தாதே' என அட்வைஸ் செய்துள்ளார்.
1258 days ago
1258 days ago