இளைஞர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் விபரீதத்தை சொல்லும் 'கற்றது மற'
ADDED : 1281 days ago
முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எம்.பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் கற்றது மற. இதில் கதிர், விக்டர், பவுசி, ஆர்என்ஆர்.மனோகர், தளபதி தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இயக்குனர் பாஸ்கரே இசை அமைத்திருக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்போதுள்ள இளைஞர்கள் தவறான விஷயங்களை கற்று வருகிறார்கள். அதை மறந்து விடுங்கள் என்பதை குறிக்கும் விதமாகத்தான் படத்திற்கு கற்றது மற என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சென்னை போன்ற பெரு நகரங்களில் இளைஞர்கள் சுதந்திரம் என்ற பெயரில் போதை, பெண்கள், பைக் ரேஸ், சூதாட்டம், மது இவற்றில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அதை படப்பிடித்து காட்டுவதே இந்த படத்தின் நோக்கம். என்றார்.