பிரிந்த பின் கணவரைப் பற்றி பதிவிட்ட சமந்தா
ADDED : 1381 days ago
தெலுங்கு திரை உலகத்தில் பொருத்தமான ஜோடியாக இருந்து திடீர் என பிரிந்த நட்சத்திர ஜோடி சமந்தா, நாக சைதைன்யா ஜோடி. தனது சமூக வலைத்தளங்களில் இருந்து நாக சைதைன்யா புகைப்படங்கள் அனைத்தையும் பின்னர் நீக்கினார் சமந்தா. அதன் பின்னும் அவர் பற்றி எந்த பதிவையும் போட்டதில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்த மஜிலி படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் எந்த வாசகங்களையும் அவர் போடவில்லை.
நாக சைதைன்யாவை பிரிந்த பின் அவர் பற்றி பதிவிட்ட முதல் பதிவு இது என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.