நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
ADDED : 1276 days ago
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையான சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு டில்லியில் கணவருடன் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்பகால போராட்டம் பற்றியும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி இவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில், வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.