மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1243 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1243 days ago
பாலிவுட் சினிமாவின் நடசத்திர வாரிசாகிய நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார். இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் ஆலியா பட்டுக்கும் பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூருக்கும் வரும் ஏப்-14ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
இதனை முன்னிட்டு பாலிவுட் மட்டுமின்றி தனக்கு நெருங்கிய தொடர்புடைய பிரபலங்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ஆலியா பட். திருமணத்திற்கு முந்திய தினம் மும்பை தாஜ் ஹோட்டலில் இவர்களுக்கு பிரமாண்டமான பார்ட்டியும் கொடுக்க இருக்கிறார்.
அந்தவகையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனி விமானத்தில் மும்பை செல்ல இருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
1243 days ago
1243 days ago