மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1242 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1242 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1242 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட்' படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. அதேசமயம் தீவிரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக வெறும் ஐந்து நிமிடங்கள் வந்துபோகும் அளவுக்கு மட்டுமே அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் உருவாக்கப்பட்டு இருந்தது மலையாள ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெரிய நடிகர் படம் என்றாலும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத சின்ன வேடங்களில் இனி நடிக்க வேண்டாம் என்பது போன்று ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷைன் டாம் சாக்கோ, ஆரம்பத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.. பின்னர் இதிகாசா என்கிற வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர், இன்னும் சில படங்களில் கூட கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான பீஷ்ம பர்வம் படத்தில் கூட மம்முட்டிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படிப்பட்ட நடிகரை தமிழுக்கு அழைத்து வந்து முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவரை வீணடித்து விட்டார்களே என்பது தான் மலையாள ரசிகர்களின் ஆதங்கமாக வெளிப்பட்டுள்ளது...
1242 days ago
1242 days ago
1242 days ago