ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!
ADDED : 1504 days ago
பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்' . இப்படம் ராமாயணக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக படமாக்கப்பட்டு வருகிறது . தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவுகான் இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆம், நான் ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளேன். அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் இதுவரை நடித்த படங்களில் இருந்து இப்படம் மிகவும் வித்தியாசமானது. என்று தெரிவித்துள்ளார்.