அடுத்தடுத்த நான்கு படங்களில் நடிக்கும் வடிவேலு
ADDED : 1283 days ago
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்ட மறைமுக தடை காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. பிறகு சினிமாவில் மீண்டும் வடிவேலு நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார் .
மேலும் இயக்குனர் கவுதம் மேனன், வடிவேலுவை வைத்து முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 படத்திலும் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .