சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... படப்பிடிப்பு நிறைவு!
ADDED : 1316 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன் . குஜராத்தி நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மும்பையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு uமுழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி சிம்பு கூறுகையில், ‛‛பல உழைப்புக்கும், தியாகத்துக்கும் பிறகு படப்பிடிப்பு முடிவடைந்தது'' என தெரிவித்துள்ளார்.