உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றமா?

டான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றமா?

டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டான் படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக மே மாதம் 13ம் தேதி ரிலீஸ் என அறிவித்து அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் மே 20ம் தேதி உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைக்கு வருவதால் தற்போது டான் படத்தின் ரிலீஸ் தேதியை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக மே 5ம் தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் பட வட்டாரத்தில் விசாரித்தபோது ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, மே 13ல் டான் வருகிறார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !