உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ்

இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ்


2026ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த மாதம் மட்டும் 22 படங்கள் வெளிவந்தன. அது போல இந்த மாதமும் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி, “கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, ரெட் லேபிள், வித் லவ், யோகி டா” ஆகிய 5 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் படங்களில் 'வித் லவ்' படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'வித் லவ்'. படத்தின் தலைப்பே இது ஒரு காதல் கதை என்பதை சொல்லிவிடுகிறது. இந்த வார வெளியீடுகள் அனைத்தும் சிறிய படங்களே. கடந்த வருட வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெற்றி மூலம் இயக்குனராக பாராட்டப்பட்ட அபிஷன் ஜீவிந்த், இந்த வருடம் நடிகராக பாராட்டப்படுவாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

'காதல் கதை சொல்லவா' என்ற தலைப்பைப் பார்த்தாலே காதல் படம்தான் என்பது புரிந்துவிடும். ஜெயராம், நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 'யோகி டா' படத்தில் சாய் தன்ஷிகா ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவற்றோடு 'ரெட் லேபிள், கில்லி மாப்பிள்ளை' ஆகிய புதுமுக நடிகர்கள் நடிக்கும் படங்களும் இந்த வாரம் வெளியாகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !