புதையல் கதையில் ராஜமவுலியின் அடுத்த படம்
ADDED : 1419 days ago
பாகுபலி, பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வெளியாகியுள்ள ஆர் ஆர் ஆர் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதையடுத்து ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். இந்தப் படமும் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின் கதை ஒரு புதையலை மையமாகக் கொண்ட கதையில் உருவாக உள்ளதாம். இப்படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதி முடித்துவிட்ட நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.