தனுஷை இயக்கும் நெல்சன் திலீப்குமார்
ADDED : 1264 days ago
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது நேரடி தெலுங்கு படமான வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இதையடுத்து சத்யஜோதி தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படங்களை எல்லாம் முடித்த பின் கோலமாவு கோகிலா , டாக்டர், சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் . நெல்சன் தற்போது ரஜினியின் 169 வது படத்தை இயக்கும் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார் .இந்த படத்திற்கு பிறகு தனுஷை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது .