அஜித்-ஷாலினி தம்பதிக்கு 22வது திருமண நாள்! குவியும் வாழ்த்துக்கள்!!
ADDED : 1259 days ago
அஜித் குமாரும், ஷாலினியும் சரண் இயக்கிய அமர்க்களம் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தபோது காதலித்தவர்கள், 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் அஜித்- ஷாலினி தம்பதி இன்று 22வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரென்டிங் செய்து, அஜித்-ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துகளையும், அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கினர்.