160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2
ADDED : 1522 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகை பிரமிக்க வைத்த படம் ‛அவதார்'. வசூலையும் வாரி குவித்த இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா பிரச்னையால் அவதார் இரண்டாம் பாகம் தாமதமாகி வந்தது. இப்போது வருகிற டிச., 16ல் படம் வெளியாக உள்ளது. உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இப்படத்தின் முதல் முன்னோட்ட வீடியோவை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.