உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்வதேச சமையல் கலை நிபுணராக அனுஷ்கா

சர்வதேச சமையல் கலை நிபுணராக அனுஷ்கா

பாகுபலி இரண்டு படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் அனுஷ்கா நடிப்பில் பாகமதி, சைலன்ஸ்(தமிழில் நிசப்தம்) படங்கள் வெளியாகின. இதன் பிறகு மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா இப்போது மகேஷ் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். நாயகனாக நவீன் பொலிஷிட்டி நடிக்கிறார். இந்த படத்தில் சர்வதேச சமையல் கலை நிபுணராக நடிக்க உள்ளார் அனுஷ்கா. இந்த கதையை கேட்ட உடன் சம்மதம் சொல்லிவிட்டாராம். மேலும் இந்த படத்திற்காக உடல் எடையையும் கணிசமாக குறைத்துள்ளார். மே முதல் வாரம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் காதலும், காமெடியும் கலந்து தயாராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !