தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி
ADDED : 4 days ago
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் சென்சேஷன் டாபிக்காக இருப்பது நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததும், அவர் அடுக்கடுக்கான வைத்த குற்றச்சாட்டுகளும் தான். இதை வைத்து சிலர் சகட்டுமேனிக்கு விஜய், சங்கீதாவை விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்த கேள்விக்கு நடிகர் ஆரி அளித்த பதில், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து கூறுவது அநாகரிகமானது. விஜய்க்கு மட்டுமின்றி பலருக்கும் இதுபோன்று நடக்கிறது. அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக் கொள்ள கூடியது இல்லை. சமூக வலைதளத்தின் வளர்ச்சி அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது'' என தெரிவித்துள்ளார்.