'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி
ADDED : 1 days ago
மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்' படம் 25 நாளில் 35 கோடி வசூல் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
அதேபோல் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த 'தாய் கிழவி' படம் 3 நாளில் 22 கோடி வசூலித்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த வெற்றி படங்களாக மாறி உள்ளன. இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் விற்று விட்டதால் ரிலீசுக்கு முன்பே இந்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளன. இந்த படங்களின் பட்ஜெட்டும் ஓரளவு குறைவு என்பதால் லாபம் சாத்தியமாகி உள்ளது. தாய் கிழவி நன்றி அறிவிப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.