விஜய் - லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நடிக்கும் கேஜிஎப் 2 வில்லன்
ADDED : 1274 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விஜய் நடிக்கும் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், கே ஜி எப் 2 படத்தின் வில்லனான சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.