மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1253 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1253 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1253 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1253 days ago
பொதுவாக சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஒருநாள் முன்கூட்டியே ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பதற்காக வெள்ளிக்கிழமை படங்களை திரையிடும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. சமீப வருடங்களாக மிகப்பெரிய படங்கள் அனைத்தும் ஒருநாள் முன்கூட்டியே அதாவது வியாழக்கிழமையே வெளியிடப்பட்டு அந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய கலெக்சன் பார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாகியுள்ள சிபிஐ படத்தின் 5 ஆம் பாகம் மே 1ம் தேதி அதாவது வரும் ஞாயிறன்று வெளியாக உள்ளது இது ரசிகர்களிடையேயும் திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்கள் ஞாயிறு அல்லது திங்களில் வந்தாலும்கூட அதை முன்னிட்டு முன்கூட்டியே வியாழன் அல்லது வெள்ளியில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் மே 1ம் தேதி அன்று தான் இந்த படம் வெளியாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சனிக்கிழமை விடுமுறையும் கூட கணக்கில் கொள்ளாமல் ஞாயிறன்று பணத்தை ரிலீஸ் செய்கின்றனராம்.
அதுமட்டுமல்ல மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ஜனகணமன திரைப்படமும் தமிழில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிக அளவில் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதால் சிபிஐ 5 ; தி பிரெய்ன் படம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நிறைய காட்சிகளுடன் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
1253 days ago
1253 days ago
1253 days ago
1253 days ago