தனுஷின் கதையை இயக்கிய செல்வராகவன்
ADDED : 1383 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‛நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா, செல்வராகவன் , யோகிபாபு, எல்லி அவ்ராம் , பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள செல்வராகவன் நானே வருவேன் படத்தின் கதை தனுஷ் உடையது. நான் அந்த கதையை இயக்கி மட்டும் உள்ளேன்''என தெரிவித்துள்ளார். செல்வராகவன் முதன்முதலில் மற்றவரின் கதையை இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.