விஜய் 66வது படத்தில் இணைந்த யோகிபாபு
ADDED : 1224 days ago
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் யோகிபாபு விஜய்யுடன் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த தகவலை யோகிபாபு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சர்க்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.