மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1220 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1220 days ago
சிவகார்த்திகேயன், விஜய் இவர்களை தொடர்ந்து ரஜினிகாந்த் என டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் முன்னணி இயக்குனராக மாறிவிட்டார் நெல்சன் திலிப்குமார். சமீபத்தில் விஜய் நடிப்பில் இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் நெல்சன்.
இந்த நிலையில் ஜாலியாக ரிலாக்ஸ் செய்வதற்காக கொடைக்கானல் ட்ரிப் சென்று வந்துள்ளார் நெல்சன். இவருடன் பிக்பாஸ் புகழ் நடிகர் கவினும் இந்த ட்ரிப்பில் இணைந்து சென்று வந்துள்ளார். இருவரும் ஒரு விளையாட்டு அரங்கில் இணைந்து விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பணிபுரிந்த காலத்தில் இருந்து நெல்சனும், கவினும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1220 days ago
1220 days ago