விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்'
ADDED : 1252 days ago
'விலங்கு' வலைதள தொடரின் வரவேற்புக்கு பிறகு நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படம் 'தெய்வ மச்சான்'. மார்ட்டின் நிர்மல்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். விமலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''கிராமிய பின்னணியில் பேன்டஸியுடன் கூடிய, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை. இதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும்'' என்றார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .