உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விராட பர்வம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விராட பர்வம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளம், தமிழை விட சாய்பல்லவிக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் தெலுங்கில் உருவாகியுள்ள விராட பர்வம் படத்தில். வெண்ணிலா என்கிற நக்ஸலைட்டாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ள இந்தப்படத்தை வேணு உடுகுலா இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் பிரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா முதல் அலை துவங்குவதற்கு முன்பாகவே இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. அதன்பிறகு சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், ஏனோ சில காரணங்களால் இன்னும் படம் வெளியாகவில்லை. இந்தநிலையில் வரும் ஜூலை 1ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !