சிவகங்கை மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்
ADDED : 1324 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போது தனது தந்தையின் பெயரில் நடத்திவரும் தாஸ் அறக்கட்டளை மூலம் ஏதாவது ஒரு குறிப்பிடத்தகுந்த சமூக சேவை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அந்த வரிசையில் தற்போது அவர் நடித்துள்ள டான் படம் நாளை வெளிவரும் நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
சுமார் 21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட இந்த ஆம்புலன்சை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக வழங்கியுள்ளார். நேற்று இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான விழா மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்தது. சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.